தமிழகம் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றார். அவர் 94,977 வாக்குகளைப் பெற்று தமக்கு அடுத்தபடியாக வந்த திராவிட முன்னேற்றகழக வேட்பாளரரை 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு 26,212 வாக்குகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றகழகத்திற்கு 20,681 வாக்குகளும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கு 12,144 வாக்குகளும் கிடைத்தன. அண்ணா திராவிட முன்னேற்றகழகம் தவிர்ந்த ஏனைய கட்சிகள் வைப்புப்பணத்தையும் இழந்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த மகத்தான வெற்றி இதுவென, வெற்றி பெற்ற முத்துச் செல்வி கூறினார். மின் தட்டுப்பாடு உட்பட்ட பல பிரச்சினைகளை எதிர்கட்சிகள் எழுப்பியபோதிலும், அவற்றை வாக்காளர்கள் நிராகரித்துவிட்டார்களென அவர் கூறினார்.
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ read more»
ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். read more»
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. read more»
மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. read more»
நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார். read more»
தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார். read more»
பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது. read more»
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது. read more»