அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு எதிராக அமைச்சர்கள் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் பின்னர் சபைக்குள் சென்றும் அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள். சுமார் இரண்டு மணித்தியாலத்துக்கும் மேலாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் இந்தியாவையும் கடுமையாக விமர்சித்தார்கள். ஐக்கியதேசிய கட்சி, மற்றும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்தவாறு ஆர்ப்பாட்டத்தை பார்வையிட்டார்கள். வெள்ளை வான் ஒன்றை ஜெனீவாவுக்கு அனுப்பி உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை மிரட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க உரக்க சத்தமிட்டு கூறியதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ read more»
ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். read more»
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. read more»
மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. read more»
நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார். read more»
தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார். read more»
பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது. read more»
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது. read more»